World

தேர்தலில் போட்டியிட்ட தாய்,மகன்,கணவன், மனைவி வெற்றி!

மதுரை பேரூராட்சி வாக்கு எண்ணிக்கையில் தாய், மகன், கணவன் மனைவி, பொறியியல் பட்டதாரி இளம் பெண் வெற்றி என பல்வேறு
சுவாரஸ்யமான நிகழ்வுகள் அரங்கேறியுள்ளன.

மதுரை மாவட்டம் சோழவந்தான் பேரூராட்சி, 13வது வார்டில் சுயேட்சையாக போட்டியிட்ட பள்ளியிலும் 8வது வார்டில் சுயேட்சையாக போட்டியிட்ட அவரின் மகன் மருதுபாண்டியனும் வெற்றி பெற்றுள்ளனர்.

அதேபோல் மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் பேரூராட்சியில் திமுக சார்பில் 5 வது வார்டில் போட்டியிட்ட கோவிந்தராஜ் 4-வது வார்டில் திமுக சார்பில் போட்டியிட்ட அவரது மனைவி ரேணுகா ஈஸ்வரி என கணவன் மனைவி இருவரும் வெற்றி பெற்றுள்ளனர்.

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி பேரூராட்சியில் அதிமுக சார்பில் 18வது வார்டில் போட்டியிட்ட அசோக் மற்றும் 13 வது வார்டில் போட்டியிட்ட அவரது மனைவி சூர்யா ஆகிய இருவரும் வெற்றி பெற்றுள்ளனர். பேரூராட்சியில் 14வது வார்டு அதிமுக வேட்பாளராக போட்டியிட்ட 22 வயதான பொறியியல் பட்டதாரி பிரியதர்ஷினி வெற்றி பெற்றுள்ளார்

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading