World

தொலைக்காட்சி நிகழ்ச்சியில் தூங்கிய ரஷ்ய ஜனாதிபதி!

ரஷ்ய பாதுகாப்பு அமைச்சருடன் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற ரஷ்ய ஜனாதிபதி புதின், நிகழ்ச்சியின்போதே தூங்கி விழுந்ததைக் காட்டும் காட்சிகள் வெளியாகியுள்ளதைத் தொடர்ந்து, அவரது உடல் நிலை குறித்து அச்சம் உருவாகியுள்ளது.

சமீப காலமாக, குறிப்பாக உக்ரைன் போர் துவங்கியதிலிருந்தே, புதினுடைய உடல் நிலை குறித்த செய்திகள் பல உலாவரத் துவங்கின. புதினுக்கு புற்றுநோய் என்றும், அவருக்கு பார்க்கின்ஸன் பிரச்சினை இருப்பதாகவும் செய்திகள் வெளியாக, வெளியான சில வீடியோக்களில் கை கால்கள் நடுநடுங்கியபடி புதின் காணப்படும் காட்சிகளும் வெளியாகி சந்தேகத்தை அதிகப்படுத்தின.

இந்நிலையில், சமீபத்தில் ரஷ்ய பாதுகாப்புத்துறை அமைச்சரான Sergei Shoiguவுடன் புதின் பங்கேற்ற ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சி குறித்த ஒரு தகவல் வெளியாகியுள்ளது. அதில், கிழக்கு உக்ரைனிலுள்ள Luhansk பகுதியை விடுவித்ததற்காக தனது படையினரை பாராட்டும் புதின், இனி அவர்கள் சற்று ஓய்வு எடுத்துக்கொண்டு தங்கள் போர்த்திறனை அதிகரித்துக்கொள்ளலாம் என கூறும் காட்சி ஒன்று வெளியாகியுள்ளது. 

வழக்கமாக வீராவேசமாக வீரர்களிடையே உரையாற்றும் புதின், இந்தக் கூட்டத்தில் உற்சாகமின்றி, கடமைக்கு உரையாற்றுவதுபோல காணப்பட்டுள்ளது. அந்த வீடியோவில்தான், கூட்டத்தின் நடுவிலேயே புதின் தூங்கி வழிவது போல காணப்படும் காட்சியும் இடம்பெற்றுள்ளது. அந்த வீடியோ வெளியானதைத் தொடர்ந்து, புதினுடைய உடல் நிலை மேலும் மோசமாகியிருக்கலாமோ என்ற அச்சம் அதிகரித்துள்ளது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading