தொழில் நுட்பத்தை விடவும் துல்லியமான தர்மசேன பார்வை
கிரிக்கட் உலகம் மிகவும்
பரபரப்பாக எதிர்பார்த்த இந்தியா பாகிஸ்தான்
T20 உலக கிண்ண கிரிக்கெட் போட்டியில் இந்தியா இலகுவாக பாகிஸ்தானை வீழ்த்தியது….
பாகிஸ்தானின் சகல திறமைகளையும் திறமையீனங்களையும்
இந்திய அணியின் ஒவ்வொரு வீரரும்
கற்றுத் தேர்ந்து பந்து வீசுவதும்
அடித்து நொறுக்குவதும் நேற்றைய போட்டியிலும் வழமையாக காண முடிந்தது குறிப்பாக சொல்வதானால்
ஆட்டத்தின் முதல் சில ஓவர்களிலேயே
இந்தியா தனது வெற்றியை உறுதிப்படுத்திக் கொண்டது எனலாம்
இந்தளவு பரபரப்பான போட்டியில் முடிவுகளை இலங்கையின் நடுவர் குமார தர்மசேன பதற்றம் இன்றி
தீர்ப்புகளை வழங்கினார்
இவரது தீர்ப்புகளுக்கு எதிராக இரண்டு அணிகளும் Reviews பெற்றுக்
கொண்ட போதிலும் தர்மசேன
வழங்கிய எந்த முடிவுகளும் மாற்றத்துக்கு உள்ளாகவில்லை
தொழில்நுட்பத்தை விட வேகமாக துல்லியமாக தீர்ப்பு வழங்கும்
திறமை தர்மசேனாவுக்கு இருக்கிறது

You must be logged in to post a comment.