Sports

தோனி ஓய்வு பெற்றால் நானும் ஓய்வு பெற்று விடுவேன் ரெய்னா தெரிவிப்பு!

சுரேஷ் ரெய்னா சமீபத்திய பேட்டியில், தனக்கு இன்னும் நான்கு முதல் ஐந்து ஆண்டுகள் கிரிக்கெட் வாழ்க்கை உள்ளதாகவும் ஆனால் தோனி ஓய்வு பெற்றால் தானும் ஐபிஎல்-லில் இருந்து ஓய்வு பெற்றுவிடுவேன் என்றும்  தெரிவித்தார்.

இதுகுறித்து அந்த பேட்டியில் அவர் பேசுகையில் “எனக்கு இன்னும் நான்கு முதல் ஐந்து ஆண்டுகள் கிரிக்கெட் வாழ்க்கை உள்ளது. இந்த ஆண்டு ஐபிஎல் தொடர் உள்ளது. நான் கிரிக்கெட் விளையாடும் வரை சென்னை அணிக்காக மட்டும் விளையாடுவேன் என்று நினைக்கிறேன். இந்த ஆண்டு சிறப்பாக சென்னை அணி செயல்படும் என்று நம்புகிறோம்” என்று தெரிவித்தார்.

மேலும் பேசுகையில் ரெய்னா “தோனி அடுத்த ஆண்டு சீசனில் விளையாட வில்லை என்றால் நானும் விளையாட மாட்டேன். நாங்கள் இருவரும் சென்னை அணிக்காக 2008ஆம் ஆண்டிலிருந்து ஒன்றாக விளையாடி வருகிறோம். ஒருவேளை சென்னை அணி இந்தாண்டு வெல்லும் பட்சத்தில் அடுத்த ஆண்டு தோனியைச் சென்னை அணிக்காக விளையாட வேண்டும் என்று நான் வலியுறுத்துவேன், என்னால் முடிந்தவரை அவரை சமாதானம் செய்ய முயற்சி செய்வேன். ஒருவேளை அவர் விளையாட விரும்பவில்லை என்றால் நானும் ஐபிஎல்-லில் விளையாட மாட்டேன். என்று தெரிவித்தார்.

இந்த ஆண்டு ஐபிஎல் தொடர் கொரோனா காரணமாக நிறுத்தப்பட்டு, வரும் செப்டம்பர் மாதம் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading