Local

நேற்று சுமார் 12,000 ஆயிரம் மின் தடை சம்பவங்கள் பதிவு!

இலங்கையில் நேற்று இரவு முதல் இன்று அதிகாலை வரை வீசிய கடும் காற்று காரணமாக பல பகுதிகளில் மின்சாரம் தடைப்பட்டிருந்தது.

இதன்காரணமாக சுமார் 12,000 மின் தடை சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக மின் சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.

மின் தடை காரணமாக சுமார் 475,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அமைச்சு விடுத்துள்ள அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது. மின்சாரம் வழங்குவதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக அமைச்சின் செய்தித் தொடர்பாளர் சுலக்ஷன ஜயவர்தன தெரிவித்துள்ளார்.

காலி, மாத்தறை, கிரிபத்கொட, கண்டி, பேராதனை, குளியாப்பிட்டி, குருணாகல், களனி, இரத்மலானை மற்றும் சிலாபம் ஆகிய பிரதேசங்களில் மின் தடை சம்பவங்கள் அதிகமாக பதிவாகியுள்ளதென அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading