Sports

தோல்விக்குப் பின் மெளனம் கலைத்த ரொனால்டோ!

கத்தார் உலகக் கோப்பை தொடரில் இருந்து போர்ச்சுகல் அணி தோற்று வெளியேறிய நிலையில் அது குறித்து மெளனம் கலைத்துள்ளார் நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ.

போர்ச்சுகல் தோல்வி

கால் இறுதி ஆட்டத்தில் மொராக்கோ அணியிடம் 1-0 என்ற கோல் கணக்கில் தோல்வி அடைந்த போர்ச்சுகல் உலகக் கோப்பை தொடரில் இருந்து வெளியேறியது. இதையடுத்து மைதானத்தில் இருந்து ரொனால்டோ கண்ணீருடன் வெளியேறிய வீடியோ வெளியாகி ரசிகர்கள் மனதை வேதனையடைய செய்தது.

இந்த நிலையில் போர்ச்சுகலின் உலகக் கோப்பை கனவு முடிவுக்கு வந்தது குறித்து ரொனால்டோவின் சமூகவலைதள பதிவில், போர்ச்சுக்கலுக்கு கோப்பையை வென்று கொடுப்பதே எனது வாழ்க்கையின் மிகப்பெரிய லட்சியக் கனவாகும். கனவு இருக்கும் வரை அழகாக இருந்தது. இந்த கனவுக்காக நான் கடுமையாக போராடினேன். துரதிஷ்டவசமாக என்னுடைய கனவு நேற்று முடிவுக்கு வந்தது. போர்ச்சுகல் மீதான எனது அர்ப்பணிப்பு ஒரு கணமும் மாறவில்லை என்பதை நீங்கள் அறிவீர்கள்.

நன்றி கத்தார்

நான் எப்போதும் ஒரு இலக்கிற்காக போராடி வருகிறேன். எனது அணியினரையோ அல்லது எனது நாட்டையோ நான் ஒருபோதும் புறக்கணிக்க மாட்டேன். 16 ஆண்டுகளுக்கும் மேலாக நான் விளையாடிய 5 உலகக் கோப்பை ஆட்டங்களில், எப்போதும் மில்லியன் கணக்கான போர்ச்சுகீசியர்களின் ஆதரவிலும், நான் எனது முழுமையான பங்களிப்பை கொடுத்தேன். எப்போதும் அனைவரின் நோக்கத்திற்காக போராடும் ஒருவனாக இருக்கிறேன்.

இப்போதைக்கு அதிகம் பேச விரும்பவில்லை. ஒரு நல்ல ஆலோசகராக இருந்து ஒவ்வொருவரும் தங்கள் சொந்த முடிவுகளை எடுக்க அனுமதிக்க வேண்டிய நேரம் இது. நன்றி போர்ச்சுகல், நன்றி, கத்தார். இவ்வாறு ரொனால்டோ தெரிவித்துள்ளார்

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading