World

பிரபல தமிழ் திரைப்பட நடிகர் அமைச்சராகிறார்!

சென்னை சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி தொகுதி எம்எல்ஏ உதயநிதி அமைச்சராக பதவியேற்கிறார். முதல்வர் ஸ்டாலினின் பரிந்துரையை ஏற்று  உதயநிதி ஸ்டாலின் பதவியேற்க ஆளுநர் ரவி ஒப்புதல் அளித்துள்ளார்.

டிசம்பர் 14-ம் தேதி காலை 9.30 மணிக்கு ஆளுநர் மாளிகையில் பதவியேற்பு விழா நடைபெறுகிறது. தமிழக அமைச்சரவை 2-வது முறையாக மாற்றியமைக்கப்படுகிறது.

திருவல்லிக்கேணி-சேப்பாக்கம் தொகுதி எம்.எல்.ஏம், திமுக இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலினை அமைச்சராக்க வேண்டும் என திமுக நிர்வாகிகளும், தொண்டர்களும் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர்.

இந்நிலையில் வரும் 14ம் தேதி காலை 9.30 மணிக்கு ஆளுநர் மாளிகையில் நடைபெறும் விழாவில் விளையாட்டு மற்றும் இளைஞர் நலன், மகளிர் மேம்பாட்டு துறை, சிறப்பு திட்டங்கள் செயலாக்க துறை அமைச்சராக உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக பதவியேற்க உள்ளார். ஆளுநர் பதவி பிரமாணம் செய்து வைக்கிறார்….

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading