Entertainment

மணப்பெண்ணுக்கு கழுதையை பரிசாக கொடுத்த மாப்பிள்ளை!

பாகிஸ்தானில் தமது வருங்கால மனைவிக்குத்  தர வித்தியாசமான பரிசு ஒன்றை YouTube புகழ்   Azlan Shah வைத்திருந்தார்.

திருமண நாளன்று மணப்பெண்ணுக்கு அவர் கழுதையைப் பரிசாகத் தந்தார் 

YouTube தளத்தில் பதிவேற்றம் செய்த காணொளியில் அவர் தம்முடைய திருமண விழாவிற்கு ஒரு கழுதையைக் கொண்டுவந்து அதை மனைவியிடம் பரிசாகத் தரும் காட்சியைக் காணலாம்.

அதற்குக் காரணம்? மணப்பெண்ணுக்குக் கழுதைகள் பிடிக்கும் என்றும், அவை கடுமையாக உழைக்கும் பாசமான விலங்குகள் என்றும் கூறினார் அஸ்லான்.

காணொளி பதிவேற்றம் செய்யப்பட்டதிலிருந்து சுமார் 200,000 விருப்பக்குறிகளை (likes) அது பெற்றுள்ளது.

பல இணையவாசிகள் அஸ்லானின் செயலால் மனம் நெகிழ்ந்தனர்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading