Sports

நடப்பு சம்பியனான இங்கிலாந்தை வீழ்த்தியது நியூசிலாந்து

உலகக் கிண்ண தொடரின் முதலாவது போட்டியில் நடப்பு சம்பியனான இங்கிலாந்தை நியூசிலாந்து அணி ஒன்பது விக்கெட்டுகளால் வீழ்த்தியுள்ளது.

ஹகமதாபாத் நரேந்தி மோடி மைதானத்தில் இடம்பெறும் இந்தப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற நியூசிலாந்து அணி முதலில் பந்துவீச முடிவு செய்திருந்தது.

முதலில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி 50 ஓவர்களில் ஒன்பது விக்கெட்டுகளை இழந்து 282 ஓட்டங்களை பெற்றிருந்தது.

இந்நிலையில், 283 என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய நியூசிலாந்து அணி 36.2 ஓவர்களில் ஒரு விக்கெட்டினை மட்டுமே இழந்து வெற்றி இலக்கை அடைந்தது.

நியூசிலாந்து அணி சார்பில் டெவோன் கான்வே 152 ஓட்டங்களையும், ரச்சின் ரவீந்திரன் 123 ஓட்டங்களையும் ஆட்டமிழக்காது பெற்றிருந்தனர்.

2023 உலகக் கிண்ணம்; இங்கிலாந்து 282 ஓட்டங்கள்

13 ஆவது உலகக் கிண்ண தொடரின் முதல் போட்டியில் இங்கிலாந்து அணி 50 ஓவர்கள் நிறைவில் ஒன்பது விக்கெட்டுகளை இழந்து 282 ஓட்டங்களை குவித்துள்ளது.

ஹகமதாபாத் நரேந்தி மோடி மைதானத்தில் இடம்பெறும் இந்தப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற நியூசிலாந்து அணி முதலில் பந்துவீச முடிவு செய்திருந்தது.

இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணியினர் 50 ஓவர்கள் நிறைவில் ஒன்பது விக்கெட்டுகளை இழந்து 282 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

இங்கிலாந்து அணி சார்பில் ஜோ ரூட் 77 ஓட்டங்களையும், அணித் தலைவர் ஜோஸ் பட்லர் 43 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

இங்கிலாந்து அணியின் இறுதி துடுப்பாட்ட வீரர்களான அடில் ரஷித் மற்றும் மார்க் வூட் ஆகியோர் கடைசி விக்கெட்டுக்காக 30 ஓட்டங்களை பகிர்ந்துகொண்டனர்.

நியூசிலாந்து அணி சார்பில் மாட் ஹென்றி மூன்று விக்கெட்டுகளையும், மிட்செல் சான்ட்னர் மற்றும் க்ளென் பிலிப்ஸ் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளையும் வீழ்த்தியிருந்தனர்.

இந்நிலையில் நியூசிலாந்து அணிக்கு 283 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading