Cinema

நடிகர் விஜய்யின் படத்தில் இணைந்தார் நடிகர் பிரகாஷ்ராஜ்!

மாஸ்டர்’ வெற்றிக்குப்பிறகு நடிகர் விஜய், நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ‘பீஸ்ட்’ படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் ஆறாம் கட்டப் படப்பிடிப்பு தற்போது நடந்து வரும் நிலையில், அடுத்ததாக விஜய் தெலுங்கு இயக்குநர் வம்சி பைடிப்பள்ளி இயக்கத்தில் தமிழ், தெலுங்கில் உருவாகும் ’விஜய் 66’ படத்தில் நடிக்கவிருக்கிறார். இதற்கான, அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. பிரபல தெலுங்கு சினிமா தயாரிப்பாளர் தில் ராஜு தயாரிக்கிறார். இந்த நிலையில், இப்படத்தில் நடிகர் பிரகாஷ் ராஜ் இணைந்திருக்கிறார். இதனை பிரகாஷ் ராஜ் தெலுங்கு ஊடகம் ஒன்றிற்கு அளித்தப் பேட்டியில் உறுதி செய்திருக்கிறார்.

ஏற்கனவே, விஜய் – பிரகாஷ் ராஜ் இணைந்த ‘சிவகாசி’, ‘கில்லி’, ‘போக்கிரி’ படங்கள் சூப்பர் ஹிட் அடித்தது. ‘வில்லு’ படத்திற்குப் பிறகு மீண்டும் விஜய் படத்தில் இணைந்திருக்கிறார் பிரகாஷ் ராஜ். மேலும், ’விஜய் 66’ பட இயக்குநர் வம்சி பைடிப்பள்ளி இயக்கத்தில் மகேஷ் பாபு நடித்த ‘மகரிஷி’ படத்தில் பிரகாஷ் ராஜ் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading