Cinema

நடிகர் விஜய் கழுத்தில் சிலுவை?

சில தினங்களுக்கு முன்பு வெளியான மாஸ்டர் படத்தின் அரபிக் குத்து பாடல் தான் தற்போது இணையத்தின் லேட்டஸ்ட் ட்ரெண்ட். அந்த பாடலுக்கு நடனம் ஆடி தான் அதிகம் பேர் வீடியோ வெளியிட்டு வருகின்றனர்.

இந்நிலையில் விஜய் தனது மதத்தை படங்களில் பிரதிபலிக்கிறார் என முன்பிருந்தே புகார் சொல்லி வரும் இந்து மக்கள் கட்சி தற்போது இந்த பாடலை பற்றியும் பிரச்சனையை கிளப்பி இருக்கிறது.

“பீஸ்ட் பாடலில் ஜோசப் விஜய் சிலுவை அணிந்து இருப்பது வரவேற்கத்தக்கது. அவர் தனது மத அடையாளத்தை தைரியமாக வெளிப்படுத்துகிறார்! அதில் என்ன தவறு? இந்து மக்கள் கட்சி இதை வரவேற்கிறது. இந்தியாவில் அனைவர்க்கும் மத சுதந்திரம் உள்ளது. எனினும் தேவையற்ற பிரச்சாரங்கள் தவிர்க்கப்பட வேண்டும் – அர்ஜுன் சம்பத்” என குறிப்பிட்டு இருக்கின்றனர்.

அது ‘ANCHOR’ குறியீடு, சிலுவை அல்ல என நெட்டிசன்கள் தற்போது பதில் கொடுத்து வருகின்றனர்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading