World

வேலை இல்லாத இளைஞர்களுக்கு உதவித் தொகை அறிவிப்பு!

ஆபிரிக்க நாடான அல்ஜீரியாவில் “வேலை இல்லாத இளைஞர்களுக்கு மாதம் 13,000  தினார்கள் (இலங்கை மதிப்பில் சுமார் 20,000  ரூபாய்)  உதவித் தொகையாக வழங்கப்படுமென” அந்நாட்டு  ஜனாதிபதி அப்டெல்மத்ஜித் (Abdelmadjid) அறிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில் ”வேலையில்லாத இளைஞர்கள் சமூகத்தில் சுயமரியாதையுடன் வாழ்வதற்காகவே குறித்த உதவித்தொகை வழங்கப்படவுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

மேலும் குறித்த  இளைஞர்களுக்கு மருத்துவ காப்பீடும் வழங்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading