Local

நம்பிக்கையில்லாப் பிரேரணை கோத்தாவின் முழு அரசுக்கும் எதிரானது!

அரசுக்கு எதிரான “நம்பிக்கை இல்லா தீர்மான”த்தில் தமிழ் முற்போக்கு கூட்டணி கையெழுத்திட்டுள்ளது.

ஐக்கிய மக்கள் கூட்டணியாக நாமே இதை கொண்டு வருகிறோம்.

இந்நிலையில், இந்த, “நம்பிக்கையில்லா” பிரேரணை என்பது ஜனாதிபதி, பிரதமர் ஆகிய தனிநபர்களுக்கு எதிரானது என காட்டி தப்ப எவரும் முயல கூடாது.

ஜனாதிபதி, பிரதமர் ஆகியோருக்கு எதிராகவும் நாம் கடுமையான பிரேணைகளை கொண்டு வருகிறோம்.

அவர்களையும் காட்டு காட்டென காட்டுவோம்.

ஆனால் முதலில் வரும் இது கோதாபயவின் முழு அரசாங்கத்துக்கும் எதிரானதாகும்.

அரசாங்கத்திலிருந்து வெளியே வந்ததாக சொல்லும் அனைவரும் இதை ஆதரிக்க வேண்டும்.

முட்டாள் காரணங்களை சொல்லி எவரும் மக்களை முட்டாளாக்க முயல கூடாது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading