Local

புதிய அமைச்சரவை குறித்து ஜனாதிபதி இன்று மந்திராலோசனை!

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கும், முன்னாள் அமைச்சர்களுக்கும் இடையிலான விசேட சந்திப்பொன்று இன்று மாலை 5 மணிக்கு ஜனாதிபதி மாளிகையில் இடம்பெறவுள்ளது.

புதிய அமைச்சரவை நியமனம் தொடர்பில் இதன்போது கலந்துரையாடி இறுதி முடிவு எடுக்கப்படவுள்ளது.

இதன்படி வெற்றிடமாகவுள்ள அரச அமைச்சுப் பதவிகளுக்கு இளம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலர் நியமிக்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

சர்வதேச நாணய நிதியத்துடனான பேச்சு எதிர்வரும் 18ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள நிலையில் அரசின் ஸ்திரத்தன்மையை வெளிப்படுத்தும் நோக்கிலேயே புதிய அமைச்சரவை நியமிக்கப்படவுள்ளது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading