Gossip

நான்காவது திருமணம் செய்த கோடீஸ்வர பெண் தேனிலவில் வெளியான ஒரு புகைப்படத்தால் பிரபலமான கணவர்!




நடிகையும், கோடீஸ்வரியுமான ஜெனிபர் லோபஸை 10 நாட்களுக்கு முன்னர் மணந்த நடிகர் பென் அப்லெக் தேனிலவின் போது எடுக்கப்பட்ட ஒரே ஒரு புகைப்படம் மூலம் உலகளவில் வைரலாகியுள்ளார்.

பிரபல ஹாலிவுட் நடிகை ஜெனிபர் லோபஸ் (53), இவரின் சொத்து மதிப்பு $400 மில்லியன் ஆகும். ஜெனிபர் லோபஸ் நடிகர் பென் அப்லெக் (49) என்பவரை முதன்முறையாக 18 ஆண்டுகளுக்கு முன் காதலித்து, நிச்சயம் செய்து, திருமணம் வரை சென்று பின்னர் பிரிந்து விட்டனர்.

தற்போது, இருவரும் மீண்டும் திருமணம் செய்து கொண்டுள்ளனர். இது லோபசுக்கு 4-வது திருமணம் ஆகும். தன்னைவிட 4 வயது இளையவரான பென் அப்லெக்கை 10 நாட்களுக்கு முன் அவர் மணந்தார்.

நடிகர், நடன கலைஞர் மற்றும் பாடகர் என 3 பேரை நடிகை ஜெனிபர் லோபஸ் திருமணம் செய்து விவாகரத்து செய்து விட்டார். இவருக்கு இரட்டை குழந்தைகள் உள்ளனர். இதேபோன்று, பென் அப்லெக் நடிகை ஜெனிபர் கார்னர் என்பவரை திருமணம் செய்துகொண்டு விவாகரத்து செய்து விட்டார். இந்த தம்பதிக்கு 3 குழந்தைகள் உள்ளனர்.

திருமணம் முடிந்த பின்பு, பென் பிரான்ஸின் பாரீஸ் நகரில் செய்னி ஆற்றில் சுற்றுலா கப்பல் ஒன்றில் தேனிலவு கொண்டாட மனைவி ஜெனிபர் லோபசுடன் ஒன்றாக சென்றுள்ளார்.

இந்த புதுமண தம்பதியுடன் அவர்களது குழந்தைகளும் சென்றுள்ளனர். சென்ற இடத்தில் நடிகர் பென் கப்பலிலேயே ஒரு நாற்காலியில் அமர்ந்தபடி, அடித்து போட்டது போன்று அசந்து தூங்குகிறார்.

இதுபற்றிய பல புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் வெளிவந்து வைரலாகி உள்ளன. இதனை பார்த்த பலரும் பலவித விமர்சனங்களை பதிவிட்டு வருகின்றனர்.

அவர்களில் ஒருவர், அந்த மனிதரை அமைதியில் ஆழ்ந்து தூங்க விடுங்கள்… என தெரிவித்து சிரிப்புக்கான எமோஜிக்களையும் பக்கத்தில் பதிவிட்டு உள்ளார்.

ஜெனிபர் லோபஸை நீங்கள் திருமணம் செய்துகொண்ட பிறகு எப்படி தூங்க முடியும்? என மற்றொருவர் கிண்டலாக பதிவிட்டிருக்கிறார். இதோ போல பலரும் பென் தூங்கும் புகைப்படத்தை மீம்ஸாக போட்டு அவரை உலகளவில் வைரலாக்கி விட்டனர்

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading