Local

63 வயதுப் பெண்ணை துஷ்பிரயோகம் செய்ய முயற்சித்த 15 வயது சிறுவன்!

யாழ்ப்பாணத்தில் வயோதிப பெண்ணொருவரை 15 வயது சிறுவன் கடத்தி சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பொன்னாலை காட்டு பகுதிக்குள், வயோதிப பெண் கடத்தி செல்லப்பட்டுள்ளார்.

63 வயதுடைய வயோதிப பெண்ணொருவரை 15 வயது சிறுவன் கடத்தி சென்று வன்புணர முயன்றுள்ளார். இதன்போது குறித்த வயோதிப பெண்ணமணி தப்பித்து சென்றுள்ளார்.

இந்த சம்பவம் குறித்து வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

முறைப்பாட்டின் அடிப்படையில் பொலிஸார் இன்றையதினம் அந்த சிறுவனை கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட சிறுவனிடம் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading