World

நாய்களை கவனிக்க ஒரு இலட்சம் பவுண்ட் சம்பளம்!

பிரித்தானியாவில் ஒரு லட்சம் பவுண்ட் சம்பளத்தில் வேலைவாய்ப்பிற்கு 400 பேர் விண்ணப்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பிரித்தானியாவில் உள்ள ஒரு பணக்கார குடும்பம் தங்களது வளர்ப்பு பிராணிகளை கவனித்துக்கொள்ள இந்த சம்பளத்துடன் வேலை வாய்ப்பை அறித்துள்ளது.

குறித்த பணக்கார குடும்பம், தங்களது செல்லப்பிராணிகளை கவனித்துக்கொள்ளும் வேலைவாய்ப்புக்கான அறிவிப்பை இணையத்தில் வெளியிட்டுள்ளது.

அதற்கமைய, அவர்களது இரு வளர்ப்பு நாய்களை பராமரிக்க ஒரு லட்சம் பவுண்ட் சம்பளத்துடன் வேலை வழங்கவுள்ளதாக அறிவித்தள்ளனர்.

விண்ணப்பதாரர்கள் வளர்ப்பு பிராணிகளுக்கான உணவுப் பொருட்களை கவனித்தால், கால்நடை மருத்துவருடன் சந்திப்புகள் திட்டமிடல் போன்றவை, மாலை மற்றும் வார இறுதி நாட்களிலும், விடுமுறை நாட்கள் உட்பட எந்த நேரம் அழைத்தாலும் வேலை செய்ய தயாராக இருக்க வேண்டும் என்றும் ஆண்டுக்கு ஆறு வாரங்கள் விடுமுறை உண்டு எனவும் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

நாய்களின் மன, உடல் நலத்தையும் பாதுகாப்பையும் உறுதிசெய்யக்கூடிய திறன்பெற்ற பணியாளர் வேண்டும் என்று அந்தக் கோடீஸ்வரக் குடும்பம் நியமித்துள்ள நிறுவனம் கூறியது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading