நாளாந்த கறைகளுக்கு மேம்படுத்தப்பட்ட தீர்வை அறிமுகப்படுத்தும் தீவா பிரெஷ்
இலங்கையின் மிகவும் நம்பிக்கைக்குரிய உள்நாட்டு சலவைப் பராமரிப்பு வர்த்தகநாமமான Diva Fresh (தீவா பிரெஷ்), மேம்படுத்தப்பட்ட கறை எதிர்ப்புத் தொழில்நுட்பம், நறுமண ஊக்கி மற்றும் ஆடைகளுக்கு தூய்மையான, பிரகாசமான தோற்றத்தைத் தரும் ஒளியியல் பிரகாச தொழில்நுட்பத்துடன் கூடிய தனது புதிய மேம்படுத்தப்பட்ட சலவைத் தூளை அறிமுகப்படுத்தியுள்ளது. அன்றாடம் எதிர்கொள்ளும் கறைகளுக்கு சிறந்த தீர்வாக விளங்கும் வகையில் மீள் அறிமுகம் செய்யப்பட்டுள்ள இத்தயாரிப்பானது, 20 வருடங்களுக்கும் மேலான தீவாவின் பாரம்பரியத்தைப் பின்னணியாகக் கொண்டு, இலங்கை குடும்பங்களின் அன்றாட சலவை தொடர்பான சவால்களை மிகவும் எளிமையாகவும், விரைவாகவும், குறைந்த செலவிலும், திறனாகக் கையாளும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
நாளாந்த பயணங்களுக்குப் பின்னர் வியர்வையால் அழுக்காகும் சட்டை கொலர்கள், சேறாகும் பாடசாலை சீருடைகள், உணவு, தேநீர், கோப்பி மற்றும் சோஸ் கறைகள் என தினசரி எதிர்கொள்ளும் கறைகளானவை நாளாந்த வாழ்க்கையின் ஒரு அங்கமாக காணப்படுகின்றன. இல்லத்தரசிகள் மற்றும் குடும்பங்கள் எதிர்கொள்ளும் இந்த அன்றாட சவால்களைப் புரிந்து கொண்டு, மேம்பட்ட கறை எதிர்ப்புத் தொழில்நுட்பத்துடன் Diva Fresh மீள உருவாக்கப்பட்டுள்ளது. இது கறைகளுக்குள் ஆழமாக ஊடுருவி, ஒவ்வொரு சலவையின் போதும் கறைகளைச் சிறிய துகள்களாக உடைத்து, அவற்றை வேகமாகவும் எளிதாகவும் அகற்ற உதவுகிறது. வியர்வை, சேறு, வாகனப் புகை ஆகியன காரணமாக சட்டையின் கொலர்கள் மற்றும் மணிக்கட்டுப் பகுதிகளில் படியும் அன்றாட கறைகளை நீக்குவதுடன், உணவு மற்றும் தூசி சார்ந்த கறைகளையும் திறம்பட அகற்றி, குறைந்த வேலையில், ஆடைகள் தூய்மையாகவும் புதியதாகவும் மாற இப்புதிய சலவைத் தூள் உதவுகிறது.
சிறந்த கறை அகற்றும் திறனுக்கு அப்பால், தனது தயாரிப்பு வரிசை முழுவதிலும் நுகர்வோருக்கு பணத்திற்கான சிறந்த மதிப்பை Diva Fresh தொடர்ச்சியாக வழங்கி வருகிறது. இதே விலைப் பிரிவில் உள்ள பல போட்டி வர்த்தகநாமங்களுடன் ஒப்பிடும்போது, இதன் 60 கிராம் பொதியானது மேலதிக 10 கிராம் சலவைத் தூளைக் கொண்டுள்ளது.
இரண்டு தசாப்தங்களுக்கும் மேலாக இலங்கை வீடுகளால் நம்பப்படும் ஒரு வர்த்தகநாமமாக, நுகர்வோர் எதிர்பார்க்கும் தரம் மற்றும் நம்பகத்தன்மையைப் பேணும் அதே வேளையில், அர்த்தமுள்ள புத்தாக்கங்கள் மூலம் நுகர்வோரின் மாற்றமடைந்து வரும் தேவைகளைப் பூர்த்தி செய்ய தீவா தொடர்ச்சியாக அர்பணிப்புடன் செயற்பட்டு வருகிறது.
இது குறித்து ஹேமாஸ் கன்சியூமர் பிராண்ட்ஸ் நிறுவனத்தின் Diva Fresh வர்த்தகநாம முகாமையாளர் பிரணீத் கொலன்னகே கருத்துத் தெரிவிக்கையில், “இன்றைய நுகர்வோர் சிறந்த செயல்திறன் மற்றும் கட்டுப்படியான விலை ஆகிய இரண்டையும் வழங்கும் தயாரிப்புகளை எதிர்பார்க்கிறார்கள். தீவா பிரெஷின் மீள் அறிமுகத்துடன், எமது தயாரிப்புகளின் கவர்ச்சிகரமான பொதி அளவுகள் மற்றும் விலையிடல் மூலம் நுகர்வோர் தொடர்ச்சியாக சிறந்த நன்மையைப் பெறுவதை உறுதி செய்யப்பட்டுள்ளது. அத்துடன் கறை அகற்றும் திறனையும் நாம் மேலும் பலப்படுத்தியுள்ளோம். தமது இல்லத்தைப் பராமரிக்கும் பணிபுரியும் வேலைப்பளு மிக்க ஒரு தாயாக இருந்தாலும் சரி அல்லது வீட்டிலிருந்து தூரமாக வாழும் ஒரு மாணவராகவோ இருந்தாலும் சரி, தரத்தில் எவ்வித குறையையும் ஏற்படுத்தாது துணிகளின் சலவையை எளிமையாகவும் சிக்கனமாக மாற்றி அவர்களது தேவையை பூர்த்தி செய்யும் வகையில் Diva Fresh வடிவமைக்கப்பட்டுள்ளது.” என்றார்.
மேம்படுத்தப்பட்ட செயல்திறன், கட்டுப்படியான விலையிடல் மற்றும் நம்பிக்கையான பாரம்பரியத்துடன், இலங்கை நுகர்வோரின் மாறிவரும் தேவைகளைப் பூர்த்தி செய்யும் நடைமுறை பயன்பாட்டுக்கு ஏற்ற சலவைத் தீர்வுகளை வழங்குவதில் Diva Fresh தனது அர்ப்பணிப்பைத் தொடர்கிறது. அன்றாடம் எதிர்கொள்ளும் கறைகளுக்கான சிறந்த தீர்வாக, புதிதாக மேம்படுத்தப்பட்ட Diva Fresh, நாளாந்த கறைகளைப் பற்றிய குடும்பங்களின் கவலையை நீக்கி, வாழ்க்கையின் ஒவ்வொரு தருணத்தையும் மகிழ்வோடு அனுபவிக்க உதவுகிறது.
Hemas Consumer Brands பற்றி
60 வருடங்களாக வீடு மற்றும் தனிநபர் பராமரிப்புத் தயாரிப்புகளின் இலங்கையின் முன்னணி உற்பத்தியாளரான Hemas Consumer Brands, குடும்பங்கள் சிறந்த நாளைய தினத்தை அனுபவிப்பதற்கு வலுவூட்டுவதில் கவனம் செலுத்துகிறது. வாடிக்கையாளர்களை மையமாகக் கொண்ட முன்மொழிவுகளில் புத்தாக்கத்தை ஏற்படுத்தவும், மேம்படுத்தவும் உள்ளூர் தகவல் தரவுகளைப் பயன்படுத்துவதில் பெருமை கொள்கிறது. இது இலங்கையில் நம்பகமான வீட்டுப் பெயர் வர்த்தக நாமமாக தன்னை நிறுவுதல் எனும் அவர்களது நோக்கத்தை அடைய உதவியுள்ளது. இலங்கையின் நுகர்வோர் பற்றிய ஆழமான புரிதல் மற்றும் அதன் தயாரிப்புகளில் உயர் தரம் மற்றும் பெறுமதியை வழங்குவதற்கான அசைக்க முடியாத அர்ப்பணிப்பினால் உந்தப்பட்டுள்ள Hemas Consumer Brands, நாடு முழுவதும் உள்ள சமூகங்களின் வாழ்க்கையை தொடர்ச்சியாக வளப்படுத்துகிறது.

You must be logged in to post a comment.