Technology

நாளொன்றுக்கு 70 கிலோமீட்டர் தூரம் செல்லக்கூடிய சோலார் கார் கண்டுபிடிப்பு!

மின்சாரமின்றி சூரிய சக்தியில் நாளொன்றுக்கு 70 கிலோ மீற்றர் தூரம்  செல்லக் கூடிய சோலார் காரை நெதர்லாந்தை சேர்ந்த ‘லைட் இயர் ‘(Lightyear)என்ற மின்சாரக்  கார் தயாரிப்பு நிறுவனம் உருவாக்கி  சாதனை படைத்துள்ளது.

லைட் இயர் வன் என அழைக்கப்படும் ( Lightyear One) குறித்த காரின் மேற்பகுதி மற்றும் பேனட் பகுதியில், 5 சதுர மீற்றர் சுற்றளவுக்கு பொருத்தப்பட்டுள்ள சோலார் பேனல்கள்,  காரை இயக்குவதற்குத்  தேவையான சூரிய சக்தி ஆற்றலை உருவாக்குவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகபட்சமாக 160 கிலோ மீற்றர் தூரம் வரை செல்லும் இக்காரானது , இயக்கிய  பத்தாவது செக்கனிலேயே 100 கிலோ மீற்றர் வேகத்தை எட்டிவிடும் எனத்  தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் இக்காரானது இலங்கை மதிப்பில் 9.27  கோடி ரூபாய் வரை விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாகவும், விரைவில் சந்தைக்கு வரவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading