Local

நிறைமாத கர்ப்பிணியின் வயிற்றில் தீ வைத்து எரித்த மாமியார்

தஞ்சையில் நிறைமாத கர்ப்பிணி பெண்ணின் வயிற்றில் மாமியார் ஒருவர் தீ வைத்த எரித்த சம்பவம் அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது.

இந்திய மாநிலமான தமிழகத்தில் தஞ்சை மாவட்டம் பொட்வாச்சாவடி பகுதியைச் சேர்ந்தவர் புஷ்பவல்லி. இவரது மருமகள் நிறைமாத கர்ப்பிணியாக இருந்துள்ளார்.

மாமியார், மருமகள் இருவருக்கு அடிக்கடி கருத்து வேறுபாடு ஏற்படுவதாக கூறப்படும் நிலையில், சம்பவத்தன்றும் இருவருக்கும் சண்டை ஏற்பட்டுள்ளது. இதில் ஒரு கட்டத்தில் ஆவேசமான மாமியார் மருமகளின் வயிற்றில் தீ வைத்து எரித்துள்ளார்.

இதனையடுத்து வலியால் துடித்த கர்ப்பிணி பெண்ணை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கு அறுவை சிகிச்சை மூலம் குழந்தையினை எடுத்துள்ளனர்.

வயிற்றில் தீ எரிந்துள்ளதால் குழந்தையின் நிலையும் மோசமாக இருப்பதால், தாய் மற்றும் குழந்தை இருவரையும் தீவிர சிகிச்சை பிரிவிலேயே வைத்துள்ளனர்.

மாமியார் புஷ்பவல்லியைக் கைது செய்த பொலிசார், அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பொலிசாரின் விசாரணைக்கு பின்பு இந்த கொடூர சம்பவத்திற்கு காரணம் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading