Lead NewsLocal

1930-களில் உலக அளவில் பெரும் பொருளாதார வீழ்ச்சி ஏற்பட்டதைப் போல, மிக மோசமான பொருளாதார வீழ்ச்சி இனி நடக்கப் போகிறது

மோசமான பொருளாதார வீழ்ச்சி!
பன்னாட்டு நிதியம் எச்சரிக்கை
கொரோனாவினால் உலக அளவில் இருநூறுக்கும் மேற்பட்ட நாடுகள் பாதிக்கப்பட்டிருக்கின்றன. அதனால் அங்குள்ள பொருளாதாரமும் பாதிக்கப்பட்டிருக்கிறது.
இதையடுத்து பொதுமக்களின் நிலை என்ன என்கிற கேள்வியும் எழுந்திருக்கிறது.

நேற்று வாஷிங்டன் நகரில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய பன்னாட்டு நிதியத்தின் நிர்வாக இயக்குநரான கிறிஸ்டாலினா ஜார்ஜீவா, “உலக அளவில் கொரோனா சமுதாயத்தையும், பொருளாதாரத்தையும் நாசப்படுத்திக் கொண்டிருக்கிறது.
நம்முடைய நினைவுக்கு எட்டிய வரை இவ்வளவு பெரிய பாதிப்பை நாம் பார்த்தது இல்லை.

1930-களில் உலக அளவில் பெரும் பொருளாதார வீழ்ச்சி ஏற்பட்டதைப் போல, மிக மோசமான பொருளாதார வீழ்ச்சி இனி நடக்கப் போகிறது.
இதனால் சுமார் 170 நாடுகளில் தனிநபர் வருமானம் மிக மோசமானதாக மாறிவிட வாய்ப்பிருக்கிறது’’ என்று குறிப்பிட்டிருக்கிறார்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading