Local

நீண்ட காலமாக குழந்தை இல்லாமல் இருந்த ஆசிரியை ஒரே நேரத்தில் மூன்று பிள்ளைகளை பிரசவித்து உயிரிழந்தார்

கிரிந்திவெல சங்கமித்த வித்தியாலயத்தில் ஆசிரியையாகப் பணியாற்றி வந்த சந்துணி பீரிஸ் என்ற 29 வயது இளம் ஆசிரியையே இவ்வாறு உயிரிழந்தவராவார்.

பூகொட கிரிதர எனும் இடத்தில் வசித்து வந்த இவர் இந்த மாதம் 9 ஆம் திகதி தலைப்பிரசவத்துக்காக கொழும்பு வைத்தியசாலை ஒன்றில் சேர்க்கப்பட்ட பின்னர் மூன்று ஆண் குழந்தைகளை பெற்றெடுத்தார்.

பின்னர் 10 ஆம் திகதி அவர் நாரேஹன்பிட்டியில் உள்ள வேறு ஒரு வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.11ஆம் திகதி அவர் அங்கு உயிரிழந்தார்.

நீண்ட காலம் குழந்தை இல்லாமல் தவித்து வந்த இந்தப் பெண்ணின் பரிதாப மரணம் பூகொட பிரதேசத்தையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. ஒரே தடவையில் மூன்று குழந்தைகளை பிரசவித்த தாய் மரணம்

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading