Features

நுளம்புகள் ஏன் காதில் ரீங்காரம் இடுகின்றன..?

 

பெண் நுளம்புகள் மட்டுமே நம் காதுகளில் எரிச்சலூட்டும் இந்த ரீங்கிரத்தை இடுகின்றன. இந்த ரீங்காரம் வெளிவரக் காரணம், அது வினாடிக்கு பலமுறை என்ற வீதத்தில், தன் இறக்கைகளை அடித்துப் பறக்கின்றது என்பதனாலாகும்.

விசித்திரமான விஷயம் என்னவென்றால், நமக்கு எரிச்சலூட்டும் இந்த ரீங்காரமானது, இனச்சேர்க்கைக்காக தனது துணையை தேடும் ஆண் நூளம்புகளுக்கு இனிமை தரும் இசை போன்று ரசித்து மகிழ்கின்றன, என்பதாகும்.

பெண் நூளம்புகள் இனச்சேர்க்கைக்குப் பிறகு தனது முட்டைகள் வளர்ச்சியடைய வேண்டுமானால் புரதம் நிறைந்த உணவு தேவைப்படுகிறது. அது மனித இரத்தத்தில் செறிந்து காணப்படுவதால் இரத்த சாப்பாடு எடுக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படுகிறது.

அதுபோல் கார்பன் டை ஆக்சைடும் அதிகம் தேவைப்படுகிறது. அதனால்தான் நமது தலைக்கு அருகாமையில் சுத்தி வந்து ரீங்காரம் இடுகின்றன. மனிதனின் சுவாச செயல்பாட்டின் போது அதிக கார்பன் டை ஆக்சைடு வாயு வெளிட்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading