World

நோர்வேயில் 12 வயது சிறுவனை பாலியல் வல்லுறவுக்குட்படுத்திய இளம் யுவதிகள் கைது


நோர்வேயில் 12 வயதான ஒரு சிறுவனை பாலியல் வல்லுறவுக்குட்படுத்தியமை தொடர்பான வழக்கில் இரு இளம் யுவதிகள் குற்றவாளிகளாக காணப்பட்டுள்ளனர்.

நோர்வெயின் சர்ப்ஸ்போர்க் நகரில் கடந்த வருடம் மே மாதம் இப்பாலியல் வல்லுறவு சம்பவம் இடம்பெற்றதாக நீதிமன்றில் தெரிவிக்கப்பட்டது.
19 மற்றும் 17 வயதான இரு யுவதிகள் மேற்படி சிறுவனை வீடொன்றுக்கு அழைத்து பாலியல் வல்லுறவுக்குட்படுத்தினர் என குற்றம் சுமத்தப்பட்டது.

அவ்வேளையில் 15 வயதான ஒரு சிறுமியும் அங்கிருந்ததாகவும், மேற்படி குற்றச்செயல் வீடியோவில் பதிவுசெய்யப்பட்டதாகவும் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.
15 வயதான சிறுமி இரு நாட்களின் பின்னர், இசம்பவம் குறித்து தனது ஆசிரியையிடம் தெரிவித்ததால் இவ்விடயம் அம்பலமாகியது. பின்னர் பாடசாலை நிர்வாகத்தால் இது குறித்து பொலிஸாரிக்கு அறிவிக்கப்பட்டது.

12 வயதான சிறுவனை பாலியல் வல்லுறவுக்குட்படுத்தியமை, அக்குற்றச்செயலை வீடியோவில் படம் பிடித்தமை ஆகிய குற்றச்சாட்டுகளில் 19, 17 வயதான இருவரும் குற்றவாளிகள் என நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
19 வயதான யுவதிக்கு 2 வருடங்கள் மற்றும் 8 மாதங்கள் நிபுந்தனையுடனான சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. அத்துடன் அவருக்கும் 17 வயதான யுவதிக்கும் 75,000 நோர்வே குரோணர் (சுமார் 1.4 இலட்சம் ரூபா) அபராதமும் விதிக்கப்பட்டது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading