Local

மனைவியை கொலை செய்துவிட்டு கொரோனா நாடகம் ஆடியவர் கைது

மெக்சிகோ நாட்டில் மனைவியைக் கொலை செய்துவிட்டு கணவர் ஒருவர் கொரோனா வார்டில் இருக்கிறார் என்று கூறியதையடுத்து, தற்போது பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

மெக்சிகோ நாட்டைச் சேர்ந்த ஆண்டனி டேவிட் என்பவருக்கும் அவரது மனைவிக்கும் கடந்த சில நாட்களாக கருத்து வேறுபாடு இருந்து வந்ததாகவும், இதனால் இருவரும் விவாகரத்திற்கு விண்ணப்பித்துள்ளனர்.

இந்நிலையில் திடீரென அவரது மனைவியை கடந்த இரண்டு நாட்களாக காணவில்லை என்றதால் உறவினர்கள் பொலிசில் புகார் அளித்தனர்.

பொலிசார் கணவரிடம் விசாரணை நடத்திய போது, கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதால் தனிவார்டில் சிகிச்சை பெற்று வருவதாக கூறியுள்ளார்.

ஆண்டனி கூறியதை வைத்து பொலிசார், மருத்துவமனையில் விசாரித்த போது அவ்வாறு இங்கு யாரும் வரவிலலை என்று கூறியுள்ளனர். பின்பு ஆண்டனியிடம் விசாரித்த போது, மனைவியைக் கொலை செய்துள்ளதாக ஒப்புக்கொண்டுள்ளார்.

மேலும் அவரது படுக்கை அறையில் ரத்தக்கறையுடன் கூடிய துணி ஒன்றையும் கண்டெடுத்த பொலிஸார் ஆண்டனியை கைது செய்துள்ளனர்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading