Local

பங்காளி கட்சிகள் தனிவழி சந்திப்பால் கடும் சீற்றத்தில் ஆளும் கட்சி!

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன தலைமையிலான அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் 11 பங்காளிக்கட்சிகள் மீண்டுமொருமுறை தனிச்சந்திப்பொன்றை நடத்தியுள்ளமை குறித்து அரசியல் களத்தில் பலகோணங்களில் கருத்துகள் முன்வைக்கப்பட்டுவருகின்றன.

ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தலைமையகத்தில் அக்கட்சியின் தலைவர் மைத்திரிபால சிறிசேன தலைமையிலேயே நேற்று முன்தினம் இரவு இச்சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

தேசிய சுதந்திர முன்னணி, தூய  ஹெல உறுமய, ஜனநாயக இடதுசாரி முன்னணி, இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி உட்பட 11 கட்சிகளின் தலைவர்கள் சந்திப்பில் பங்கேற்றனர் என அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்தார்.

மாகாணசபைத் தேர்தலை நடத்துவது தொடர்பான புதிய சட்டம், மே தினம் உட்பட சமகால அரசியல் நிலைவரங்கள் தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்பட்டன என்று சுதந்திரக்கட்சியின் உப தலைவரான அமைச்சர் நிமல் சிறிபாலடி சில்வா தெரிவித்தார்.

அதேவேளை, அரசிலிருந்து விலகி தனிவழி செல்வதற்கான நகர்வா இதுவென எழுப்பட்ட கேள்விக்கு, இல்லை என அமைச்சர் நிமல் சிறிபாலடி சில்வா பதிலளித்தார்.

மே தினம் தனித்தா அனுஷ்டிக்கப்படும் என்ற கேள்விக்கு, கூட்டாகவும், தனித்தும் அனுஷ்டிப்பதற்கான உரிமை உள்ளது. ” – என்றார்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading