World

பணத்தை பணத்திற்கு விற்பனை செய்யும் நாடு!

கீழே தரப்பட்டிருக்கும் புகைப்படங்கள் சுற்றுலாப் பயணிகளுக்கு சோமாலியா நாட்டின் பணத்தை விற்பனை செய்யும் காட்சி. எல்லா நாட்டிலும் பொருளைத்தான் பணத்திற்கு விற்பார்கள் ஆனால் இங்கே பணத்தையே பணத்திற்கு விற்க வேண்டிய நிலைமை.

தெளிவாக சொல்ல வேண்டுமானால் நீங்கள் ஒரு சோப்புக் கட்டியை வாங்க வேண்டுமென்றால் கூட மூட்டையில் தான் பணத்தை தூக்கிச் செல்ல வேண்டும்.

திறமையற்ற அரசியல் தலைவர்களும் கொள்ளை கூட்டத்தினரும் ஆட்சி செய்யும் நாட்டில் இது போல் தான் நடைபெறும்.
யாராவது ஒரு நல்ல அரசியல் தலைவர் உருவாகி வந்து இந்த நாட்டை காப்பாற்றுவார் என்று நீங்கள் நினைப்பீர்களேயானால் உங்கள் கதி அதோ கதிதான். ஏனென்றால் இப்போது இருக்கும் அரசியல் தலைவர்களும் அவர்கள் பிள்ளைகளும் உலகம் முழுவதும் பத்து தலைமுறைக்கு சொத்து சேர்த்து வைத்து விட்டார்கள். அவர்களுக்கு டாலர் ஏறினால் என்ன?  இறங்கினால் என்ன?

ஓரளவாவது மக்கள் இந்தக் கொடுமையில் இருந்து தப்பித்துக் கொள்ள வேண்டுமென்றால் தற்சார்பு பொருளாதாரக் கொள்கைக்கு மாறுவதே  ஒரே வழி.
வீட்டுத்தோட்டம் மாடித்தோட்டம் சிறு அளவிலாவது கோழி,ஆடு,மாடு வளர்த்தல் போன்றவற்றை மக்கள் இப்பொழுதே பயிற்சி செய்து வைத்துக் கொள்வது நிச்சயமாக உதவப் போகின்றது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading