World

படுக்கையறைக்கு வந்த வேற்றுகிரகவாசியால் பரபரப்பு!

நபர் ஒருவர் தனது வீட்டின் படுக்கையறையில் வேற்றுக்கிரக வாசிகளைப் பார்த்ததாக பொலிஸாரிடம் தகவல் அளித்த சம்பவம் அயர்லாந்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அயர்லாந்தில் இவ்வாண்டு  வானில் ”பறக்கும் தட்டுகள், விசித்திரமான ஒளி மற்றும் வேற்றுகிரகவாசிகளைப் பார்த்ததாக 8 விநோத வழக்குகள் பதிவாகியுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

இந்நிலையில் அண்மையில் உள்ளூரில் வசிக்கும் நபர் ஒருவர் தனது படுக்கையறையில் வேற்றுகிரகவாசிகளைப் பார்த்ததாகப்பொலிஸாருக்கு புகார் அளித்திருந்தார்.

இச்சம்பவமானது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தபோதும்  இது குறித்த போதிய ஆதாரமின்மையால் இவ்  விடயம் எவ்வித சர்வதேச ஊடகங்களிலும் பேசப்படவில்லை.

இந்நிலையில் இது குறித்துக் கருத்துத் தெரிவித்த அந்நாட்டுப் பொலிஸார் ”சிலர் கவனத்தை ஈர்ப்பதற்காக இவ்வாறு வழக்குகளைப்  பதிவு செய்கின்றனர் ” என்றனர்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading