Local

பல்லேகமவில் நடைபெற்ற புதிய நீர் இணைப்பு திட்டம்!

தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையானது பாவனையாளர் சமூகத்திற்கு விசேட சலுகைகளை வழங்கி, புதிய குடிநீர் இணைப்புகளை விரைவாக வழங்குவதற்காக “தொரின் – தொரட்ட ரன் தியவர” எனும் செயற்திட்டத்தை நாடளாவிய ரீதியில் நடைமுறைப்படுத்தி வருகின்றது. இத்திட்டத்தின் கீழ் கட்டானை அலுவலக பொறுப்பாளர் பகுதியில் புதிய குடிநீர் இணைப்புகளை வழங்கும் நிகழ்வு 07.07.2023 அன்று பல்லேகம சனசமூக மண்டபத்தில் நடைபெற்றது.

சபையின் உப தலைவர் சஞ்சீவ விஜேகோன், மேல் மாகாண முன்னாள் மாகாணசபை உறுப்பினர் ஆனந்த ஹரிஷ்சந்திர, கோவின்ன பிரதேச சபை உறுப்பினர் ஹேமந்த, வணிக பிரதி பொது முகாமையாளர் பியால் பத்மநாத், கட்டணப் பட்டியல் உதவிப் பொது முகாமையாளர், முகாமையாளர், வணிக அதிகாரி மற்றும் பொறுப்பதிகாரி உள்ளிட்டோர் இந்நிகழ்வில் பங்கேற்றனர்.

புதிய நீர் இணைப்புகளை பெற்றுக்கொள்வதற்கு வட்டியில்லா தவணை முறையில் கட்டணங்களை செலுத்துவதற்காக இலங்கை வங்கியும் இத்திட்டத்துடன் இணைந்துகொண்டுள்ளது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading