World

மனைவியை கொலை செய்து மூளையை சாப்பிட்ட கணவன்!

உலகில் சில நபர்கள் மிக மோசமான மனநிலையில் சைக்கோத்தனமான செயல்களில் ஈடுபடுவதை நாம் அறிந்து இருப்போம். அப்படித் தான் மெக்சிகோவில் ஒரு சைக்கோ நபர் தன்னை சாத்தான் வழிபாட்டாளர் என்று கூறி தனது மனைவியை நரபலி கொடுத்து, அந்த பெண்ணின் மாமிசத்தை சாப்பிட்டுள்ளார்.

மெக்சிகோ, ப்யூப்லா என்ற பகுதியை சேர்ந்தவர் 32 வயதான அல்வாரோ. இவரது மனைவி மரியா. இந்த இருவருக்கும் கடந்த ஆண்டு திருமணம் நடைபெற்றுள்ளது.

மரியாவுக்கு ஆரம்பத்தில் இருந்த உறவு மூலம் 5 குழந்தைகள் உள்ளனர். கட்டுமான தொழிலாளரான அல்வாரோ மது மற்றும் போதை பழக்கத்திற்கு அடிமையானவர்.

இருவருக்கும் திருமணமாகி ஓர் ஆண்டு காலம் கூட நிறைவேறாத நிலையில், அல்வாரோ தனது மனைவியை தொடர்ந்து அடித்து துன்புறுத்தி வந்துள்ளார்.

அத்துடன் மரியாவின் மகள்களை அல்வேரோ பாலியல் துன்புறுத்தளுக்கு ஆளாக்கியதாகவும் கூறப்படுகிறது. இவரின் செயல்களை தாங்க முடியாமல் மரியாவின் இரு மகள்கள் தாயின் பாட்டி வீட்டில் வாழ்ந்து வந்துள்ளனர்.

இந்நிலையில் தான் கடந்த ஜூன் 29 ஆம் திகதி கொடூர செயலில் ஈடுபட்டுள்ளார்.

தனது மனைவியை கொலை செய்த இவர், அவரது உடலை பல துண்டுகளாக வெட்டி பிளாஸ்டிக் பைகளில் வைத்துள்ளார். அத்துடன் பெண் மரியாவின் மூளையை நர மாமிசமாக சாப்பிட்டுள்ளார்.

அத்துடன் மனைவியின் மண்டை ஓட்டை சிகரெட் ஆஷ் டிரேவாக பயன்படுத்தியுள்ளார்.

இந்த கொடூரக் கொலை நடந்து இரு நாட்களுக்கு பிறகு மரியாவின் மகளை அழைத்து அவரை கொன்றுவிட்டேன் என ஒப்புக் கொண்டுள்ளார்.

தகவல் அறிந்த பொலிஸார் ஜூலை 2 ஆம் திகதி அன்று அல்வாரோவை கைது செய்தனர்.

சாத்தானின் கட்டளையை ஏற்று தான் இந்த கொலையை செய்ததாக அல்வாரோ தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading