Cinema

பழங்களின் தோலில் ஹேண்ட் பேக் உருவாக்கும் நடிகர் அர்ஜூன் மகள்!

பழங்களின் தோல்களைக் கொண்டு ஹேன்ட் பேக்குகளை உருவாக்கிய நடிகர் அர்ஜுன் மகள் அஞ்சனா. அர்ஜூனின் இரண்டாவது மகளான அவர், நாம் உண்ணும் பழங்களின் தோல்களைப் பயன்படுத்தி ஹேண்ட் பேக்குகளை உருவாக்கியிருக்கிறார்.

உலகத்திலேயே இதுதான் முதல்முறை என்ற பெருமை அஞ்சனா அர்ஜூனுக்கே சேரும். அந்த ஹேண்ட் பேக்குகளை விற்பனை செய்ய சர்ஜா என்ற நிறுவனத்தையும் தொடங்கியுள்ளார்.

புதிய நிறுவனத்தின் தொடக்க விழா ஹைதராபாத்தில் நடைபெற்றது. விழாவில் மாண்புமிகு தெலுங்கானா மற்றும் புதுச்சேரி மாநிலங்களின் ஆளுநர் திருமதி தமிழிசை சௌந்தர்ராஜன் மற்றும் ராமோஜிராவ் ஃபிலிம் சிட்டி விஜய ஈஸ்வரி ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading