Local

பாகிஸ்தானின் தேவைக்கேற்ப தீர்மானம் எடுக்க முடியாது!

பாகிஸ்தான் அரசாங்கத்தின் தேவைக்கேற்ப தீர்மானங்களை மேற்கொள்ள முடியாது என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ரியல் அட்மிரல் சரத் வீரசேகர தெரிவிக்கின்றார்.

புர்கா தடை தொடர்பில் மிரிஹான பொலிஸ் நிலையத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

இலங்கை அரசாங்கத்தின் தேவைகேற்ற விதத்திலேயே தாம் செயற்படுவதாகவும் அவர் கூறுகின்றார்.

இந்த விடயம் அமைச்சரவையில் கலந்துரையாடப்பட்டு, பின்னர் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் குறிப்பிடுகின்றார்.

எதிர்வரும் காலத்தில் எவ்வாறான பதில் கிடைக்கும் என்பதனை பொருத்திருந்து பார்க்க வேண்டும் என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ரியல் அட்மிரல் சரத் வீரசேகர தெரிவிக்கின்றார்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading