Local

பாடசாலை மாணவர்களை தாக்கி வரும் கொரோனா!

பாடசாலை மாணவர்கள் பலருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளமை நேற்று தெரியவந்துள்ளது.

இதற்கமைய குளியாபிட்டிய, திருகோணமலை, கதிர்காமம் மற்றும் பசறை ஆகிய பகுதிகளிலுள்ள பாடசாலை மாணவர்களுக்கே இவ்வாறு தொற்று உறுதியாகியுள்ளது.

பசறை மத்திய மகா வித்தியாலத்தில் மேலும் 5 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானமையை அடுத்து பாடசாலையில் தொற்றுதியானவர்களின் எண்ணிக்கை 15 ஆக அதிகரித்துள்ளது.அவர்களில் 10 பேர் கடந்த 22 ஆம் திகதி அடையாளம் காணப்பட்டிருந்தனர்.

கதிர்காமம் மற்றும் செல்லக்கதிர்காமம் பகுதிகளிலுள்ள இரண்டு பாடசாலைகளில் இரண்டு மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.அவர்கள் இருவரும் தரம் 11 இல் கல்வி பயில்வதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, திருகோணமலை பகுதியில் 3 பாடசாலைகளை சேர்ந்த 99 மாணவர்கள் சுயதனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.குறித்த பாடசாலைகளின் ஆசிரியர் மற்றும் இரண்டு மாணவர்களுக்கு தொற்று உறுதியானமையை அடுத்து அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

தரம் மூன்று மற்றும் 10 இல் பயிலும் இரண்டு மாணவர்களுக்கே இவ்வாறு தொற்றுறுதியாகியுள்ளது.

அத்துடன் தொற்றுறுதியான ஆசிரியை தரம் 2, 5 மற்றும் 10 இல் பயிலும் மாணவர்களுக்கு கற்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading