Local

பாதுகாப்பு முறை குறித்து விளக்கம் – கட்டுநாயக்க விமான நிலையத்தில் புதிய நடைமுறை

கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் பாதுகாப்புக்காக புதிய செயல்திறன்மிக்க நடவடிக்கைகள் பல மேற்கொள்ளப்படவுள்ளன.

பயணிகளின் பொதிகளை பரிசோதனை செய்வதற்காக புதிய ஸ்கேனர்(Scanner) இயந்திரங்கள் பொருத்தப்பட உள்ளன. பாதுகாப்பு நடவடிக்கை காரணமாக ஏற்படக்கூடிய தாமதத்தை தவிர்த்துக் கொள்வதற்காக விமானம் புறப்படுவதற்கு முன்னர் 4 மணித்தியலாத்திற்கு முன்னதாக பயணிகள் விமான நிலையத்தை வந்தடைய வேண்டும்.

இதே போன்று பயணிகள் செல்லும் பொழுதும் விமான நிலையத்திற்கு வரும் பொழுதும் அவர்களது உறவினர்கள் நண்பர்களை விமான நிலையத்திற்கு அழைத்துச் செல்வதை தவிர்த்துக் கொள்ளுமாறும் கோரப்பட்டுள்ளன.

கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் பாதுகாப்பு முழுமையாக உறுதி செய்யப்பட்டிருப்பதாக விமான நிலைய மற்றும் விமான சேவைகள் நிறுவனம் தெரிவித்தள்ளது.

தற்பொழுது புதிய பாதுகாப்பு விதிமுறைகள் விமான நிலையத்தில் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இதனால் பயணிகளும் பொது மக்களும் சிரமங்களுக்கு உள்ளாகாத வகையில் வசதிகள் செய்யப்பட்டிருப்பதாக நிறுவனத்தின் தலைவர் தம்மிக ரணதுங்க தெரிவித்தார்.

இருப்பினும் பாதுகாப்புக்கு முக்கயத்துவம் வழங்கும் பொழுது சில வேலைகளில் விமான நிலையத்திற்கு வரும் பயணிகள் சில அசௌகரியங்களுக்கு உள்ளாக கூடும். இதனை இட்டு தாம் கவலை தெரிவிப்பதாகவும் அவர் கூறினார்.

விமான நிலைய பாதுகாப்பு அதன் செயற்பாடுகள் விமான நிலையத்தில் பயன்படுத்துவோரின் பாதுகாப்பு முதலானவற்றுக்கான தற்பொழுது மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து இன்று நடைபெற்ற செய்தியாளர் மகாநாட்டில் நிறுவனத்தின் தலைவர் தம்மிக ரணதுங்க இந்த விடயங்களை குறிப்பிட்டார்.

விமான நிலைய வளவில் வாகன நடைமுறையிலும் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.வரும் மற்றும் வெயியேறும் பொழுது மாறப்பட்ட வாகன இரண்டு திட்டம் நடைமுறைப்படுத்தப்படுவதாகவும் அவர் கூறினார்.

இந்த செய்தியாளர் மகாநாடு இன்று காலை விமான நிலைய கட்டிடத்தில் நடைபெற்றது. விமான நிலையத்தின் பாதுகாப்பு தொடரிபில் மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து விடயதானத்திற்கு பொறுப்பான இராஜாங்க அமைச்சர் ஆகியோருடன் அடிக்கடி கலந்துரையாடப்படுவதாகவும் தெரிவித்த அவர் தேவையான நடவடிக்கைகள் அவ்வப்போது மேற்கொள்ளப்படும் வேண்டும் எனவும் அவர் கூறினார்.

பாதுகாப்பு நடவடிக்கை காரணமாக பொது மக்கள் எதிரிக்கொள்ளும் சிரமங்களை தவிரப்பதற்காக 24 மணித்தியாலங்களும் இலவச பஸ் சேவை இடம்பெறுகிறது. தேவையான தகவல்களை பயணிகளுக்கு வழங்குவதற்காக விமான நிலைய அதிகாரிகள் 24 மணித்தியாலமும் செயல்பட்டு வருகின்றனர். வைத்திய பணியாளர்களுக்கும் இவ்வாறு சேவையில் ஈடுபட்டுள்ளனர் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading