Local

புதிய சட்டமா அதிபராக தப்புல டி லிவேரா ஜனாதிபதி முன் இன்று பதவிப்பிரமாணம்!

பதில் சட்டமா அதிபர் தப்புல டி லிவேரா இன்று (10) முற்பகல் ஜனாதிபதி செயலகத்தில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் முன்னிலையில் புதிய சட்டமா அதிபராகப் பதவிப்பிரமாணம் செய்துகொண்டார்.

மேலும் எச்.எம்.காமினி செனெவிரத்ன உள்ளக உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளராகவும், திருமதி.கே.ஜீ.அசோகா அலவத்த ஆரம்பக் கைத்தொழில் மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சின் செயலாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் இருவரும் இன்று முற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதியிடமிருந்து தமது நியமனக் கடிதங்களைப் பெற்றுக்கொண்டனர்.

 

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading