EntertainmentWorld

பிரபல டிக்டாக் பிரபலம் கார் விபத்தில் உயிரிழப்பு!

பிரபல டிக்டாக் நட்சத்திரம் அலி துலின் கார் விபத்து ஒன்றில் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அமெரிக்காவின் புளோரிடாவில் திங்களன்று  இடம்பெற்ற கார் விபத்தில் அவர் உயிரிழந்துள்ளார் என இன்டிபென்டன்ட் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரபலமான காணொளிகளை பகிர்வு தளத்தில் அவர் ஒரு மில்லியனுக்கும் அதிகமான பின்தொடர்பவர்களை வைத்துள்ளார். 

21 வயதான அவர் இன்ஸ்டாகிராமிலும் செல்வாக்கு செலுத்தியவராக இருந்தார். 

சமூக ஊடக தளங்களில் நடன காணொளிகளைப் பகிர்ந்த பிறகு அலி  பிரபலமடைந்தார் என்று இன்டிபென்டன்ட் வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், பல சமூக ஊடக பயனர்கள் மற்றும் அலியின் ஆதரவாளர்கள் சோகத்தை வெளிப்படுத்தியதுடன் அவருக்கு அஞ்சலி செலுத்தினர்.

சம்பவம் குறித்து பொலிசார் விசாரணையைத் தொடங்கியுள்ளனர், விரைவில் முன்னேற்றத்தை அறிவிப்பார்கள் என்று டெய்லி ஸ்டார் செய்தி வெளியிட்டுள்ளது. 

இந்த விபத்தில் வேறு உயிரிழப்புகளும் ஏற்பட்டிருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading