Cinema

பிரபல நடிகர் சூப்பர் ஸ்டார் காலமானார்!

பிரபல கன்னட நடிகர் புனித் ராஜ்குமார் மாரடைப்பு காரணமாக காலமானார். அவருக்கு வயது 46

பழம்பெரும் கன்னட நடிகர் ராஜ்குமாரின் மகனும் கன்னட சூப்பர் ஸ்டாருமான புனித் ராஜ்குமார் அவர்களுக்கு இன்று காலை 11 30 மணியளவில் திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. இதனை அடுத்து அவர் பெங்களூரில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சற்று முன் அவர் காலமானதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து ரசிகர்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்

கன்னட சூப்பர்ஸ்டார் அவர்களை காப்பாற்ற கடும் முயற்சி செய்ததாகவும் ஆனாலும் எங்களது முயற்சி பலனளிக்கவில்லை என்றும் அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்

இந்த நிலையில் கன்னட சூப்பர் ஸ்டார் புனித் ராஜ்குமார் அவர்கள் மறைவையடுத்து பெங்களூரில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் விடுமுறை அளிக்கப் பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது

மேலும் ராஜ்குமார் உடல் வைக்கப்பட்டிருக்கும் பெங்களூர் மருத்துவமனை முன்பு ரசிகர்கள் ஆயிரக்கணக்கானோர் குவிந்ததால் அந்த பகுதியில் பெரும் பதற்ற நிலை காணப்படுகிறது என்பதும் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading