World

பொண்டாட்டி தொல்லை தாங்கல ஜெயில்ல போட கெஞ்சிய நபரால் பரபரப்பு!

இத்தாலியில் வீட்டில் மனைவியின் தொல்லை தாங்க முடியாததால் சிறையில் அடைத்து விடுங்கள் என போலீசாரிடம் கெஞ்சிய நபரால் பரபரப்பு ஏற்பட்டது.

இத்தாலியின் ரோம் நகரத்தை ஒட்டி கைடோனியா மாண்டெசெலியோ என்ற பகுதியிலேயே இச்சம்பவம் நடந்துள்ளது.

இங்கு வசித்து வரும் அல்பேனியா வம்சாவளியை சேர்ந்த இளைஞர் ஒருவர் போதைப்பொருள் பயன்படுத்திய குற்றத்திற்காக சிறையில் அடைக்கப்பட்டார்.

தண்டனை காலம் முடிவு இன்னும் சில மாதங்கள் இருக்கும் நிலையில், வீட்டிலிருந்து தப்பி போலிஸ் நிலையம் வந்துள்ளார் அந்த இளைஞர்.

அப்போது, போலிசாரிடம் வீட்டில் மனைவியின் தொல்லை தாங்கமுடியவில்லை, வீட்டை நரகம் போல் உணர்கிறேன். என்னை சிறையிலேயே அடைத்து விடுங்கள், பளீஸ் என கெஞ்சியுள்ளார்.

இந்நிலையில் வீட்டுச்சிறையிலிருந்து வெளியே வந்த குற்றத்திற்காக அவரை கைது செய்த போலீசார் சிறையில் அடைத்தனர்

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading