Sports

3 ரன்கள் வித்தியாசத்தில் பங்களாதேசை வீழ்த்தியது மேற்கத்திய தீவுகள் அணி!

டி20 உலகக் கோப்பை போட்டியில், 3 ரன்கள் வித்தியாசத்தில் வங்கதேசத்தை வீழ்த்தியது வெஸ்ட் இண்டீஸ்

நடப்பு டி20 உலகக் கோப்பை தொடரின் சூப்பர் 12 சுற்றுப் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் வங்கதேச அணிகள் விளையாடின. இதில் டாஸ் வென்ற வங்கதேச அணி, பவுலிங் செய்வதாக தெரிவித்தது. அதனால் வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பேட் செய்து 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 142 ரன்களை எடுத்தது.

143 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை வங்கதேச அணி விரட்டியது. லிட்டன் தாஸ் 44 ரன்களும், மஹ்மதுல்லா 31 ரன்களும் எடுத்தனர். இருபது ஓவர்கள் முடிவில் வங்கதேச அணியால் 5 விக்கெட் இழப்பிற்கு 139 ரன்கள் மட்டும்தான் எடுக்க முடிந்தது. அதனால் 3 ரன்கள் வித்தியாசத்தில் வெஸ்ட் வெற்றி பெற்றது. இந்த தொடரில் வெஸ்ட் இண்டீஸ் பெற்றுள்ள முதல் வெற்றி இது.

வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக பந்து வீசிய பவுலர்கள் அனைவரும் தலா ஒரு விக்கெட் வீழ்த்தி இருந்தனர்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading