Cinema

பிரபல நடிகை சோனியா அகர்வால் கைது!

போதை பொருள் விற்பனையாளருடன் தொடர்பில் இருந்ததால் பிரபல கன்னட நடிகை சோனியா அகர்வால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கன்னட திரையுலகில் போதைப்பொருட்கள் பயன்படுத்திய விவகாரம் தொடா்பாக பிரபல நடிகைகள் ராகிணி திவேதி, சஞ்சனா கல்ராணி ஆகிய 2 பேரையும் பெங்களூரு மத்திய குற்றப்பிரிவு பொலிசார் கைது செய்திருந்தனர். தற்போது அவர்கள் ஜாமீனில் வெளியே உள்ளனர்.

இதற்கிடையில், பெங்களூருவில் கடந்த 12-ம் திகதி போதைப்பொருள் விற்பனையாளரான நைஜீரியாவை சேர்ந்த தாமஸ் என்பவரை பொலிசார் கைது செய்திருந்தனர். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் கன்னட நடிகையும், மொடல் அழகியுமான சோனியா அகர்வால் உள்ளிட்ட பலருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது.

அதைத்தொடர்ந்து, பெங்களூரு ராஜாஜிநகரில் உள்ள சோனியா அகர்வாலின் வீட்டில் நேற்று பொலிசார் அதிரடி சோதனை நடத்தினார்கள். அப்போது அங்கிருந்து 40 கிராம் கஞ்சா இருந்ததை கண்டு அதிர்ந்த பொலிசார் அவருக்கு போதை விற்பனையில் தொடர்பு இருப்பதை உறுதி செய்தனர்.

இதையடுத்து பெங்களூருவில் உள்ள ஒரு நட்சத்திர ஓட்டலில் தங்கியிருந்த நடிகை சோனியா அகர்வாலை பொலிசார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.

அவரிடம் நடத்தப்படும் விசாரணையில் இது தொடர்பாக மேலும் பல தகவல்கள் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.  

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading