Local

பொலிஸ் அதிகாரியின் மனைவி மற்றும் மகன் கொரோனா தொற்றால் உயிரிழப்பு!

காவல்துறைமா அதிபரின் செயலகத்தில் இணைந்து சேவையாற்றி வருகின்ற காவல்துறை அதிகாரி ஒருவரின் மனைவி, மகன் ஆகியோர், கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான நிலையில், சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளனர் என்று காவல்துறை தகவல்கள் தெரிவித்தன.

காவல்துறை அதிகாரியின் புதல்வர் சட்ட மாணவர் என்பதுடன் கொரோனாத் தொற்றுக்குள்ளான நிலையில், கொத்தலாவல பாதுகாப்பு வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையிலேயே, அவர் சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளார்.

காவல்துறை அதிகாரியும் தொற்றுக்கு உள்ளாகியுள்ள நிலையில், அவர் குண்டசாலை காவல்துறை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

அவரது மனைவி கடந்த வாரம் தொற்றுக்கு உள்ளாகி சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே, சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளார்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading