Sports

பிரபல பொலிவுட் நடிகரின் பங்களாவில் உணவகம் தொடங்கும் விராட் கோலி!

மும்பையில் உள்ள மறைந்த பொலிவுட் நடிகர் கிஷோர் குமாரின் பங்களாவில் விராட் கோலி உயர்தர உணவகத்தை தொடங்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

பொலிவுட் திரையுலகில் மிகப்பெரிய நட்சத்திரகமாக வலம் வந்தவர்களில் ஒருவர் கிஷோர் குமார். நடிகர் மற்றும் பாடகராக பலரின் மனதை கவர்ந்தவர் கிஷோர் குமார். கடின உழைப்பு, தன்னம்பிக்கை மற்றும் அர்ப்பணிப்பு ஆகியவற்றின் மூலம், கிஷோர் குமார், சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை உருவாக்கிக் கொண்டார்.

மும்பையின் ஜூஹூவில் கௌரி குஞ்ச் என்ற பெயரில் ஒரு ஆடம்பரமான பங்களாவின் உரிமையாளராகவும் இருந்தார்.

சமீபத்திய தகவல்களின்படி, இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி, கிஷோர் குமாரின் பங்களாவை வாடகைக்கு எடுத்துள்ளதாகவும் அதில் உயர்தர உணவகத்தை தொடங்கவுள்ளதாக கூறப்படுகிறது.

பங்களாவின் ஒரு பகுதியை விராட் வாடகைக்கு எடுத்த தகவலை கிஷோர் குமாரின் மகன் அமித் குமார் உறுதிப்படுத்தியுள்ளார். அந்த இடத்தை 5 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு விடப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

ஏற்கெனவே இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர்கள் சவுரவ் கங்குலி, சச்சின் டெண்டுல்கர் ஆகியோர் நட்சத்திர ஹோட்டல்களை நடத்தி வருகின்றனர்.

அவர்களுக்கு அடுத்து விராட் கோலியும் ஹோட்டல் தொழிலில் கால்பதிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading