Local

புதிய பிரதமரை நியமிக்க ஜனாதிபதி இணக்கம்!

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுடன் இன்று (ஏப்ரல் 29) இடம்பெற்ற பேச்சுவார்த்தை வெற்றியடைந்ததாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மைத்ரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

புதிய பிரதமர் மற்றும் புதிய அமைச்சரவையின் கீழ் இடைக்கால அரசாங்கத்தை அமைப்பதற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இன்றைய பேச்சுவார்த்தையில் இணக்கம் தெரிவித்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

நாட்டை நிர்வகிப்பதற்கு ஜனாதிபதி மற்றும் புதிய அமைச்சரவைக்கு உதவுவதற்காக தேசிய சபையொன்றை நியமிப்பதற்கும் அவர்கள் இணக்கம் தெரிவித்துள்ளதாக மைத்ரிபால சிறிசேன தெரிவித்தார்.

இன்று காலை அரசாங்கத்தில் இருந்து விலகி சுயாதீனமாக செயற்படும் 11 கட்சிகளின் தலைவர்களுடன் கலந்துரையாடியதையடுத்து இந்த இணக்கப்பாட்டுக்கு வந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading