பொதுத் தேர்தலை நடத்துவதற்கான சுகாதார பொறிமுறை முன்வைப்பு

சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி பொதுத்தேர்தலை எவ்வாறு நடத்தலாம் என்பது தொடர்பான வழிகாட்டல்கள் அடங்கிய விசேட அறிக்கையொன்றை சுகாதார அமைச்சின் தொற்றுநோய் விஞ்ஞானப் பிரிவு, தேர்தல் ஆணைக்குழுவிடம் கையளித்துள்ளது.
தேர்தல் ஆணைக்குழுவின் உறுப்பினர்களுக்கும், சுகாதார அமைச்சின் தொற்றுநோய் பிரிவு பிரதானிகளுக்குமிடையில் நேற்று முன்தினம் விசேட சந்திப்பொன்று தேர்தல் ஆணைக்குழுவில் நேற்று (04) நடைபெற்றது. இதன்போது பரிந்துரைகள் அடங்கிய மேற்படி அறிக்கை கையளிக்கப்பட்டுள்ளது.
வாக்களிப்பின்போது சமூக இடைவெளி பின்பற்றப்பட வேண்டும் என்றும், முகக்கவசம், கைக்கவசம் ஆகியன கட்டாயம் அணியப்பட வேண்டும் என்றும் சுகாதார அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர். அத்துடன், மேலும் சில நடைமுறைகளும் கையளிக்கப்பட்டுள்ள பரிந்துரை அறிக்கையில் உள்ளடக்கப்பட்டுள்ளது என தெரியவருகின்றது.
ஜுன் 20 ஆம் திகதி பொதுத்தேர்தல் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தாலும் எதிர்வரும் 14 ஆம் திகதியே இறுதி முடிவு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது
