Local

பொன்சேகாவிற்கு பிரதமர் பதவியை ஏற்குமாறு தூது அனுப்பிய கோட்டா!

பாராளுமன்ற உறுப்பினர் டயானா கமகேவின் கணவர் கப்டன் சேனக சில்வா ஊடாக பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவிற்கு முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அனுப்பிய செய்தி தொடர்பான தகவல்களை பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா வெளிப்படுத்தியுள்ளார்.

ஜூலை மாதப் போராட்டத்தின் பின்னர் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தன்னைப் பிரதமர் பதவியை ஏற்குமாறு அழைப்பு விடுத்ததாக அவர் தெரிவித்துள்ளார்.

பாராளுமன்ற உறுப்பினர் டயானா கமகேவின் கணவர் கப்டன் சேனக சில்வா ஊடாக இது தொடர்பான செய்தி தனக்கு அனுப்பப்பட்டதாக பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

தாம் சொன்ன வழியில் செயற்பட்டிருந்தால் கோட்டாபய ராஜபக்ச இன்றும் ஜனாதிபதியாக பதவி வகித்திருப்பார் என இணையத்தளமொன்றுக்கு வழங்கிய கலந்துரையாடலில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எவ்வாறாயினும், பிரதமர் பதவியை ஏற்பதற்கு தாம் பல நிபந்தனைகளை முன்வைத்ததாகவும், அதன் பின்னர் கோட்டாபய ராஜபக்ஷ, ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்ததாகவும் சரத் பொன்சேகா தெரிவித்தார்.

அதன் பின்னர் கோட்டாபய ராஜபக்ச தமக்கு தொலைபேசியில் அழைப்பு விடுத்த விதத்தை சரத் பொன்சேகா இந்த கலந்துரையாடலில் வெளிப்படுத்தியதோடு மகிந்த ராஜபக்சவும், சமல் ராஜபக்ஷவும் உங்கள் பிரதமராக நியமனம் குறித்து அஞ்சுவதாகவும் தனக்கும் ஒருவித அச்சம் இருப்பதாகவும் தெரிவித்தார்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading