Cinema

பொன்.பார்த்திபன் இயக்கத்தில் நடிக்கும் ஜோதிகா!

நடிகர் சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் ஜோதிகாவை வைத்து தயாரிக்க உள்ள படத்தை புதுமுக இயக்குனர் பொன் பார்த்திபன் இயக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

திரைக்கதை எழுத்தாளரான பொன்.பார்த்திபன், முன்னதாக இரும்புத் திரை, கைதி மற்றும் மாஸ்டர் போன்ற பிளாக்பஸ்டர் படங்களுக்கு உரையாடல்களை எழுதியுள்ளார்.

ஜோதிகாவோடு நடிக்கும் நடிகர்கள் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என படக்குழுத் தெரிவித்துள்ளது.

இந்தப் படம் வரும் ஜனவரியில் திரைக்கு வர உள்ளதாகவும் கூறப்படுகிறது.

நடிகை ஜோதிகா, சரவணன் இயக்கத்தில் நடித்து முடித்துள்ள ‘உடன்பிறப்பே’ திரைப்படம் வரும் அக்டோபரில் அமேசான் பிரைம் வீடியோவில் நேரடியாக வெளியாக உள்ளது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading