Local

ரூபா 200 கோடி மோசடியில் சிக்கிய இலங்கை நடிகையிடம் தீவிர விசாரணை!

மோசடி புகாருக்குள்ளான சுகேஷ் சந்திரசேகா் தொடா்புடைய பண மோசடி வழக்கில் இலங்கையை சேர்ந்த ஹாலிவுட் நடிகை ஜாக்குலின் பொ்னாண்டஸிடம் அமலாக்கத் துறை அதிகாரிகள் திங்கள்கிழமை விசாரணை நடத்தினா்.

இந்த வழக்கில் ஒரு சாட்சியாக நடிகையிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டதாக அமலாக்கத்துறை அதிகாரிகள் தெரிவித்தனா். குற்றவியல் சதி, மோசடி மற்றும் சுமார் 200 கோடி ரூபாய் மிரட்டி பணம் பறித்ததாக டெல்லி பொலிஸ்துறையின் பொருளாதார குற்றப்பிரிவு சுகேஷ் மீது குற்றம் சுமத்தியுள்ளது.

இதில் ஜக்குலின் பாதிக்கப்பட்டுள்ளார். வழக்கு விசாரணையில் அவரை சாட்சியாக இணைத்துக் கொள்ள இந்த விசாரணை நடந்தது.

இரட்டை இலை சின்னம் தொடா்பான வழக்கில் பெங்களூரைச் சோ்ந்த இடைத்தரகா் சுகேஷ் சந்திரசேகா் திகாா் சிறையில் அடைக்கப்பட்ட நிலையில், சிறையில் இருந்தபடியே பல்வேறு வகைகளில் பண மோசடியில் ஈடுபட்டுவந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதுகுறித்து, விசாரணை நடத்திய அமலாக்கத் துறை, பல கோடி ரூபாய் மோசடியில் அவா் ஈடுபட்டு வருவதை கண்டறிந்து அவா் மீது சட்ட விரோத பண பரிமாற்ற தடைச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்தனா். அத்துடன் சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள அவருடைய வீட்டில் சோதனை நடத்திய அதிகாரிகள் பல கோடி ரூபாய் மதிப்பிலான 16 வெளிநாட்டு காா்கள், ரூ. 82.05 லட்சம் ரொக்கம், 2 கிலோ தங்கம் என்பவற்றை பறிமுதல் செய்தனா்.

இந்த நிலையில், இந்த வழக்கு தொடா்பாக நடிகை ஜாக்குலின் பொ்னாண்டஸிடம் அமலாக்கத் துறை அதிகாரிகள் திங்கள்கிழமை விசாரணை நடத்தியதுடன், ‘இந்த வழக்கில் ஒரு சாட்சி என்ற அடிப்படையில் 36 வயது நடிகையிடம் 4 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டது. அப்போது, அவருடைய வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டது’ என அதிகாரிகள் கூறியுள்ளனர்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading