போர் ஓயுமா?
ஐரோப்பிய இராணுவ கூட்டமைப்பான நேட்டோவில் சேர உக்ரைன் ஆர்வம் காட்டி வந்தநிலையில் அந்த நாடோடு ரஷ்யா ஜனாதிபதி புதின் போர் அறிவித்து தாக்குதல் நடத்தி வருகிறார்.
மூன்று ஆண்டுகளுக்கு மேலாக நீடித்து வரும் இந்த போரில் உக்ரைனுக்கு ஆதரவாக அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகள் நிதி கொடுத்தும், ஆயுதங்கள் சப்ளை செய்தும் உதவி வருகின்றன.
கடந்த ஆண்டு அமெரிக்காவில் புதிய ஜனாதிபதிக்கான தேர்தலில் டிரம்ப் வெற்றி பெற்று 2-வது முறையாக அந்த நாட்டின் ஜனாதிபதியாக பதவியேற்றார். முன்னதாக தேர்தல் வாக்குறுதியின்போது ரஷியா-உக்ரைன் இடையேயான போரை நிறுத்துவதாக அறிவித்தார். அதன்படி ஜனாதிபதியாக பதவியேற்றதை தொடர்ந்து உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியை வெள்ளை மாளிகைக்கு வரவழைத்து நேரலையில் உரையாடி அவர் மீது கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார்.
இந்தநிலையில் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் தற்போது ரஷ்யாவை உடனடியாக போர் தாக்குதலை நிறுத்துமாறு அறிவுறுத்தியுள்ளார். இதற்காக 50 நாட்கள் கெடு விதித்துள்ளார். மேலும் அதனை மீறி போர் தாக்குதலை நீடித்தால் கடுமையான பொருளாதார தடைகளை சந்திக்க நேரிடும் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அவர் கூறுகையில், “உக்ரைனுடன் அமைதி பேச்சுவார்த்தைக்கு எப்போதும் நாங்கள் தயார். ஆனால் எங்களுடைய லட்சியங்கள் ஈடேறும்வரை போர் தாக்குதல் தொடரும். நேட்டோ கூட்டமைப்பில் உக்ரைன் சேருவதை தவிர்க்க வேண்டும். எல்லை மீறி ஆக்கிரமித்த பகுதிகளை சுதந்திரமாக அறிவிக்க வேண்டும். மேற்கத்திய நாடுகளுடனான தொடர்பை துண்டித்து ராணுவத்தை குறைத்தால் நாங்கள் புதிய அமைதி பேச்சுவார்த்தைக்கு இப்போதும் தயார்” என பேசினார்.

You must be logged in to post a comment.