Local

மக்கள் கூடியுள்ள இடங்களில் தண்ணீர் அருந்தக் கூட முகக்கவசத்தை நீக்காதீர்கள்!

இதுவரையில் கொரோனா தடுப்பூசியைப் பெற்றுக்கொள்ளாதவர்கள், ஏதேனும் ஒரு தடுப்பூசியைப் பெற்றுக்கொள்ளுமாறு இராஜாங்க அமைச்சரான விசேட வைத்தியர் சுதர்ஷினி பெர்னாண்டோபுள்ளே தெரிவித்துள்ளார்.

கட்டான பகுதியில் வைத்து ஊடகங்களிடம் கருத்து தெரிவித்தபோது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

எந்த வகையான தடுப்பூசி என்று பார்த்துக்கொண்டிருக்காமல், அருகிலுள்ள தடுப்பூசி செலுத்தல் மையத்திற்கு சென்று, ஏதேனும் ஒரு தடுப்பூசியைப் பெற்றுக்கொள்ள வேண்டும்.

டெல்டா திரிபு மிக வேகமாக பரவுவதனால், வீட்டிலிருந்து வெளியேறுபவர்கள், மக்கள் கூடி இருந்தால், அந்த இடத்தில் தேநீர் அருந்தவோ அல்லது தண்ணீர் அருந்தவோ முகக்கவசத்தை அகற்ற வேண்டாம் என இராஜாங்க அமைச்சரான விசேட வைத்தியர் சுதர்ஷினி பெர்னாண்டோபுள்ளே வலியுறுத்தியுள்ளார்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading