Cinema

ரஜினிகாந்தின் படத்தில் நடிக்க மறுத்த ஜெயலலிதா!

தனது தனி ஸ்டைலுக்காகவே ஏராளமான ரசிகர்களை தாராளமாகப் பெற்றவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.

அதனால்தான், ‘இது எப்படியிருக்கு?’ என்று நெகட்டிவ் கேரக்டரில் நடித்தபோது அவரை ரசித்தவர்கள், ஹீரோவான போது கொண்டாடினார்கள். சூப்பர் ஸ்டார் பட்டம் என்பது சும்மா கிடைத்து விடுவாமா என்ன?

அப்படிப்பட்ட ரஜினிகாந்துக்கு திருப்புமுனையை தந்த படம் ‘பில்லா’. அவரை டாப் ஹீரோவாக உயர்த்திய படமும் இதுதான். இதிலிருந்துதான் ரஜினிகாந்தின் சூப்பர் ஸ்டார் பாதை தொடங்கியதாகச் சொல்வார்கள் சினிமா ஆர்வலர்கள்.

மிரட்டலான அதிரடி ஆக்‌ஷன் படமான ‘பில்லா’, இந்தியில் அமிதாப்பச்சன், ஜீனத் அமன் நடிப்பில் சூப்பர் ஹிட்டான ‘டான்’ படத்தின் ரீமேக்.

1978 ஆம் ஆண்டு வெளியான ‘டான்’, அமிதாப்பச்சனை கோபக்கார இளைஞனாக அங்கு கொண்டாட வைக்க, அதே கொண்டாட்டம் ரஜினிக்கும் கிடைக்கும் என்று ஆணித்தரமாக நம்பி, பாலாஜி தயாரித்த படம் இது.

அவர் நம்பிக்கை வீண் போகவில்லை. அதை விட அதிகமான வரவேற்பையே பில்லா பெற்று தந்தது.

1980 ஆம் ஆண்டு தமிழில் வெளியான ‘பில்லா’ மெகா ஹிட்டானது. ரஜினிகாந்துக்கு கிடைத்த மெகா கமர்சியல் ஹிட் படங்களில் இதுவும் ஒன்று. இன்ச் பை இன்ச் அப்படியே இந்தி டான்-ஐ உல்டாவாக்கி இருந்தார்கள்.

ஆனால், நடிப்பில் ரஜினி, அமிதாப்பச்சனைக் காப்பி அடிக்கவில்லை. அவர் தனது தனித்துவமான ஸ்டைலில் மிரட்டலாக நடித்தார். இந்தியில் ஜீனத் அமன் நடித்த வேடத்தில் தமிழில் ஸ்ரீப்ரியாவும், போலீஸ் அதிகாரியாக பாலாஜியும் நடித்தனர்.

மேஜர் சுந்தர்ராஜன், மனோகர், தேங்காய் சீனிவாசன், அசோகன், மனோரமா உட்பட பலர் நடித்திருந்த இந்தப் படத்தை ஆர்.கிருஷ்ணமூர்த்தி இயக்கி இருந்தார்.

எம்.எஸ்.வி இசையில், கண்ணதாசன் பாடல்கள் எழுதியிருந்தார்.

ஏ.எல்.நாராயணன் வசனம் எழுதி இருந்தார். 1980 ஆம் ஆண்டு ஜனவரி 26ஆம் தேதி வெளியான இந்தப் படம், 25 வாரங்கள் ஓடி மெகா ஹிட்டானது.

இந்தப் படத்துக்குப் பிறகு இயக்குநர் கிருஷ்ணமூர்த்தி, ‘பில்லா’ கிருஷ்ணமூர்த்தி ஆனார். ஸ்ரீப்ரியா வேடத்தில் முதலில் நடிக்க முடிவானது ஜெயலலிதா. அவர் சில காரணங்களால் நடிக்க மறுத்துவிட, பிறகுதான் இந்தப் படத்தில் ஸ்ரீப்ரியா நடித்துள்ளாராம்

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading